நடிகை சமந்தா செய்த புதிய சாதனை – இன்ஸ்டாகிராமில் 2 கோடி ஃபாலோயர்கள்! குவியும் வாழ்த்துக்கள்!

0
நடிகை சமந்தா செய்த புதிய சாதனை - இன்ஸ்டாகிராமில் 2 கோடி ஃபாலோயர்கள்! குவியும் வாழ்த்துக்கள்!
நடிகை சமந்தா செய்த புதிய சாதனை - இன்ஸ்டாகிராமில் 2 கோடி ஃபாலோயர்கள்! குவியும் வாழ்த்துக்கள்!
நடிகை சமந்தா செய்த புதிய சாதனை – இன்ஸ்டாகிராமில் 2 கோடி ஃபாலோயர்கள்! குவியும் வாழ்த்துக்கள்!

தென் இந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை சமந்தா தற்போது முதன்மை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 கோடி பின்தொடர்பவர்களை பெற்று புதிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

நடிகை சமந்தா

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழ் திரைப்பட நடிகை சமந்தா தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் துணை கதாப்பாத்திரம் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை சமந்தா காலப்போக்கில் தவிர்க்க முடியாத ஒரு உயரத்தை எட்டினார். அந்த வகையில் ரசிகர்களின் பேராதரவுடன் கோலிவுட், பாலிவுட் என எல்லாவற்றையும் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க இருக்கிறார் நடிகை சமந்தா.

கல்யாண பெண்ணாக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமராஜ் – வைரலாகும் வீடியோ!

சினிமாவை போல தனிப்பட்ட வாழ்க்கையையும் வெற்றிகரமாக நடத்தி வந்த நடிகை சமந்தா, நடிகர் நாகசைதன்யாவுடன் ஆன தனது 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையை சமீபத்தில் முறித்து கொண்டார். இந்த விவாகரத்து தொடர்பாக பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை இவர் எதிர் கொண்டு வந்தாலும் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது வேலையே சிறப்பாக செய்து வருகிறார். தற்போது நடிகை சமந்தாவின் கைவசம் தமிழில் ‘காத்து வாக்கில் ரெண்டு காதல்’ மற்றும் சில பெயரிடப்படாத திரைப்படங்கள் உள்ளது.

சன் டிவி “கயல்” சீரியலில் களமிறங்கும் “கல்யாண வீடு” நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

அதே போல தெலுங்கிலும் சில திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கும் சமந்தா, பாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்க இருக்கிறார். சினிமா துறையை சேர்ந்த மற்ற நடிகர், நடிகைகளை போலவே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, தற்போது ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். அதாவது, முன்னணி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 20 மில்லியன் அதாவது 2 கோடி என்ற அளவில் பின் தொடர்பவர்களை பெற்று சாதனை செய்துள்ளார். இந்த வெற்றியை நடிகை சமந்தாவுடன் சேர்ந்து அவர்களது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here