‘தி பேமிலி மேன் 2’ சண்டைக்காட்சிகளில் மிரட்டிய சமந்தா – வைரலாகும் காணொளி!

0
'தி பேமிலி மேன் 2' சண்டைக்காட்சிகளில் மிரட்டிய சமந்தா - வைரலாகும் காணொளி!
'தி பேமிலி மேன் 2' சண்டைக்காட்சிகளில் மிரட்டிய சமந்தா - வைரலாகும் காணொளி!
‘தி பேமிலி மேன் 2’ சண்டைக்காட்சிகளில் மிரட்டிய சமந்தா – வைரலாகும் காணொளி!

இந்தி மொழியில் தயாரான ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடரில் நடித்துள்ள தென் இந்திய நடிகை சமந்தா, முதல் முறையாக பயங்கரமான சண்டை காட்சிகளில் நடித்துள்ள காணொளிகளை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காணொளிகள் தற்போது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

வெப் தொடரில் சமந்தா

இந்தியாவில் அனைத்து வகையான சேவைகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி வரும் வேலையில், சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தற்போது பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் துவங்கி சிறிய ஆல்பம் பாடல்கள் வரை இணையதளத்தில் வெளியாகி, வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சினிமா பிரபலங்கள் பலரும் டிஜிட்டல் திரையில், அதாவது வெப் தொடர்களில் கதாநாயகியாக, நாயகனாக நடித்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

ssc

முன்னதாக காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடித்து பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், நடிகை சமந்தாவும் ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட தி பேமிலி மேன் தொடரின் முதலாம் பாகத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் தலத்தில் வெளியான இந்த தொடரை ராஜ் மற்றும் டிகே இயக்கியிருந்தனர். பலத்த ஆதரவுகளை பெற்ற இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் இலங்கை தமிழகராக நடிகை சமந்தா நடித்துள்ளார்.

நாயகிகளே தோற்றுப்போகும் அளவிற்கு ரீல்ஸ் செய்து அசத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – வைரலாகும் வீடியோ!!

இந்த தொடர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அமேசான் ப்ரைம் தலத்தில் வெளியானது. இதில் சமந்தா நடித்துள்ள சண்டை காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘சண்டை காட்சிகள் முழுவதிலும் நானே நடித்துள்ளேன். எனக்கு பயிற்சியளித்த யானிக் பென் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். உடலில் பல வலிகள் காயங்கள் ஏற்பட்டாலும், எனக்கு ஊக்கம் கொடுத்தது அவர் தான். உயரத்தில் இருந்து குதிப்பது எனக்கு பயமாக இருக்கின்ற போதிலும் நான் அவ்வாறு செய்ததன் காரணம், என் பின்னால் அவர் இருந்தது தான். அவருக்கு எனது அன்பை தெரிவித்து கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!