நாகசைதன்யாவுடன் விவாகரத்து – முதன்முறையாக மனம் திறந்த சமந்தா! ரசிகர்கள் உருக்கம்!

0
நாகசைதன்யாவுடன் விவாகரத்து - முதன்முறையாக மனம் திறந்த சமந்தா! ரசிகர்கள் உருக்கம்!
நாகசைதன்யாவுடன் விவாகரத்து - முதன்முறையாக மனம் திறந்த சமந்தா! ரசிகர்கள் உருக்கம்!
நாகசைதன்யாவுடன் விவாகரத்து – முதன்முறையாக மனம் திறந்த சமந்தா! ரசிகர்கள் உருக்கம்!

நடிகை சமந்தா தனது விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு எந்த வித சலசலப்புகளுக்கும் பதில் அளிக்காமல் இருந்தார். ஆனால் தனது டிவீட்டர் தளத்தில் முதன்முறையாக மனம் திறந்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

முதல் பதிவு:

தமிழ் நடிகைகள் பலர் மற்ற மொழி திரைப்படங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளனர். மேலும், அங்கு உள்ள திரை பிரபலங்களை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விடுவார்கள். அப்படி சென்ற ஸ்ரீதேவி, அசின் போன்ற தவிர்க்க முடியாத நாயகிகளின் வரிசையில் உள்ளவர் தான் சமந்தா. தமிழில் தான் முதலில் நடிக்க தொடங்கினார். ஆனால் 8 வருட போராட்டங்களுக்கு பின்னர் தான் தனது கடின உழைப்பினால் முன்னணி நடிகையாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

வெண்பாவை வெளுத்து வாங்கிய சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய ட்விஸ்ட்!

தமிழில் பிரபலமடைந்ததை அடுத்து தெலுங்கு திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். அங்கு குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகி விட்டார். அப்போது தன்னுடன் நடித்த சக நடிகரான தெலுங்கு திரை உலகின் மிகவும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 4 வருடங்களாக மிகவும் சந்தோசமாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்வில் சமீப நாட்களாக பல பிரச்சனைகள்.

இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக தங்களது டிவீட்டர் தலத்தில் அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகு சமந்தா எந்த வித கருத்துக்களையும் வெளியிடாமல் இருந்தார். தற்போது முதன்முறையாக ஒரு புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில், என்னைப் பற்றிய உங்களது உணர்வுப்பூர்வமான அக்கறை என்னை வியப்படையச் செய்துள்ளது. என்னைப் பற்றிய தவறான செய்திகள், கதைகள் பரவிய போது நீங்கள் என் மீது காட்டிய அக்கறைக்கும், ஆதரவுக்கும் நன்றி.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2 பிரபல சீரியல்கள் நிறுத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு என்றார்கள், குழந்தை பெற்றுக்கொள்ள நான் சம்மதிக்கவில்லை என்றார்கள். சந்தர்ப்பவாதி என்றார்கள். இப்பொழுது நான் கர்ப்பத்தை கலைத்துவிட்டதாக கூறுகிறார்கள். விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து தனியாக மீண்டு வர அனுமதியுங்கள். ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எந்தவிதமான வதந்திகளும் என்னை காயப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார். சமந்தாவின் இந்த மனம் திறந்த பதிவை கண்ட அவரது ரசிகர்கள் மிகவும் உருக்கமாகவும், ஆறுதலாகவும் பதில் அளித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here