14 வாரங்களுக்கு ரூ.350 கோடி சம்பளம் – ‘பிக் பாஸ்’ சீசன் 15 சல்மான் கானுக்கு ஜாக்பாட்!

0
14 வாரங்களுக்கு ரூ.350 கோடி சம்பளம் - 'பிக் பாஸ்' சீசன் 5 சல்மான் கானுக்கு ஜாக்பாட்!
14 வாரங்களுக்கு ரூ.350 கோடி சம்பளம் - 'பிக் பாஸ்' சீசன் 5 சல்மான் கானுக்கு ஜாக்பாட்!
14 வாரங்களுக்கு ரூ.350 கோடி சம்பளம் – ‘பிக் பாஸ்’ சீசன் 15 சல்மான் கானுக்கு ஜாக்பாட்!

பிரபல பாலிவுட் உச்ச நட்சத்திரமான நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு அவர் அதிகபட்சமாக ரூ.350 கோடி சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக ஒரு வாரத்திற்கு ரூ.25 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

சல்மான் சம்பளம்

பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட 15 நபர்களை 100 நாட்களுக்கு ஒரே வீட்டுக்குள் அடைத்து வைத்து பல வகையான விளையாட்டுகள் மூலம் அவர்களது திறனை, குணத்தை வெளிக்கொண்டு வருவதே பிக்பாஸ் நிகழ்ச்சியின் நோக்கமாகும். இப்படி வெவ்வேறு குணங்களை கொண்டவர்கள் எப்படி ஒருவரை ஒருவர் அட்ஜஸ்ட் செய்து அந்த வீட்டுக்குள் தங்களை தக்கவைத்து கொள்கிறார்களோ அவர்கள் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ‘தேன்மொழி பிஏ’ சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக ஹிந்தி மொழியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஹிந்தியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல நடிகர் சல்மான் கான் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 11 சீசன்களை தொகுப்பாளராக நிறைவு செய்திருக்கும் அவர், அக்டோபரில் தொடங்கும் 15ஆவது சீசனிலும் கலந்து கொள்ளுவார் என தெரிகிறது.

சல்மான் கான் கிட்டத்தட்ட 14 வாரங்களுக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக ரூ.350 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் சல்மான், கடந்த 11 சீசன்களிலும் தொகுப்பாளராக இருந்து வருகிறார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அவரது தனித்துவமான பாணி மற்றும் நிகழ்ச்சியை நடத்தும் விதம் ஒவ்வொரு சீசன்களிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரியாலிட்டி ஷோவில் அதிக சம்பளம் வாங்கி வரும் சல்மான், கடந்த பிக்பாஸ் சீசன் 7ல் வெறும் ரூ. 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

அதுவே பிக்பாஸ் 13ல், அவர் வாரத்திற்கு ரூ.13 கோடி பெற்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இந்த 15 ஆவது சீசனில், உள்ள 14 வாரங்களுக்கு மொத்தம்ரூ.350 கோடி என்ற அளவில், வாரத்திற்கு ரூ. 25 கோடி சல்மானுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது போல மலையாள திரைப்பட உலகின் முன்னணி நடிகர் மோஹன்லால் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் மொத்தமாக 18 கோடி சம்பளம் பெறுகிறார்.

SIIMA 7 விருதுகளை வென்ற சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

மேலும் தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் நாகர்ஜூன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், அவருக்கு வாரந்தோறும் 12 லட்சம் என்ற வீதம் ஒரு சீசனுக்கு மொத்தமாக 8 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது கூடுதல் தகவல். இது போல அடுத்த மாதம் 3ம் தேதி முதல் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, நடிகர் கமல்ஹாசனுக்கு மொத்தம் ரூ.50 கோடி சம்பளம் எனவும், ஒரு வாரத்திற்கு அவர் ரூ.3 கோடி வரை பெற இருப்பதாகவும் தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!