தமிழக புள்ளியியல் துறையில் காத்திருக்கும் அரசு வேலை – சம்பளம்: ரூ.58,100/-

0
தமிழக புள்ளியியல் துறையில் காத்திருக்கும் அரசு வேலை - சம்பளம்: ரூ.58,100/-
தமிழக புள்ளியியல் துறையில் காத்திருக்கும் அரசு வேலை - சம்பளம்: ரூ.58,100/-
தமிழக புள்ளியியல் துறையில் காத்திருக்கும் அரசு வேலை – சம்பளம்: ரூ.58,100/-

சேலம்‌ மண்டலப்புள்ளி இயல்‌ இணை இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் இனச்‌ சுழற்சி முறை அடிப்படையில்‌ நேரடி பணி நியமனம்‌ செய்யப்படவுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் வரும் ஏப்ரல் 6, 2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சேலம்‌ மண்டலப்புள்ளி இயல்‌ இணை இயக்குநர்‌ அலுவலகம்
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இணை இயக்குநர்‌ அலுவலக காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

உதவியாளர் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

அலுவலக உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் நிலை 1 ன் படி, ரூ.15700 – 58100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை 2023 – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும்‌ நபர்கள்‌ தனித்தாளில்‌ விண்ணப்பதாரரின்‌ பெயர்‌, தகப்பனார்‌ பெயர்‌, பிறந்த தேதி, வயது, கல்வித்தகுதி, சாதி, நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி, முன்னுரிமை சான்று, இருப்பிட சான்றிதழ்‌ மற்றும்‌ இரண்டு அரசிதழ்‌ பதிவு பெற்ற அலுவலர்களிடமிருந்து நாளது தேதியில்‌ பெறப்பட்ட நன்னடத்தை சான்றுகளுடன்‌ இணைத்தும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. இதற்கென தனியாக விண்ணப்பங்களோ படிவங்களோ அங்கீகரிக்கப்படவில்லை. உரிய சான்றுகள்‌ இணைக்கப்படாத விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌. முன்னுரிமையற்றவர்‌ விண்ணப்பித்தால்‌ விண்ணப்பம்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!