தமிழகத்தில் நவம்பர் 26 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நிர்வாகம் அறிக்கை!

0
தமிழகத்தில் நவம்பர் 26 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட நிர்வாகம் அறிக்கை!
தமிழகத்தில் நவம்பர் 26 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட நிர்வாகம் அறிக்கை!
தமிழகத்தில் நவம்பர் 26 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நிர்வாகம் அறிக்கை!

தமிழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் நவம்பர் 26 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழக அரசு படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதந்தோறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற நவ. 26 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள் காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 300க்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் 40000க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள தகுதியாக 8ம் வகுப்பு., 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து கல்வித்தகுதியை சேர்ந்தவர்களும் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட் நியூஸ்.. சரியும் ஆபரணத்தங்கத்தின் விலை – நகை வாங்குற ஐடியா இருந்தா உடனே கிளம்புங்க!

Exams Daily Mobile App Download

அது மட்டுமில்லாமல் நவம்பர் 26 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களும், வேலை தேடுபவர்களும் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!