தமிழகத்தில் டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பனை – நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் அறிவிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட் – என்னனு தெரியுமா?
அதில் அரசு குழு அமைத்துள்ள நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என உய்ரநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.