Amazon, Google, Infosys, Microsoft நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
Amazon, Google, Infosys, Microsoft நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
Amazon, Google, Infosys, Microsoft நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
Amazon, Google, Infosys, Microsoft நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

2020ம் ஆண்டு முதல் பல நிறுவனங்கள் கொரோனா காரணமாக அதிக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் ஊழியர்கள் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டது, மேலும் எந்த ஒரு பதவி உயர்வும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் தற்போது நிலை கட்டுக்குள் வந்துள்ளதால், பல நிறுவனங்கள் சம்பள உயர்வு, போனஸ், சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு இன்னும் சிறந்த பதவிகள் வழங்க உள்ளதாக ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சம்பள உயர்வு:

நாடு முழுவதும் ஒட்டுமொத்த COVID-19 நிலைமை சீராகி வருவதால், அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், அமெரிக்க ஊழியர்களுக்கான முந்தைய அதிகபட்ச சம்பளமான 160,000 டாலர் இலிருந்து 350,000 டாலர் என அதன் அடிப்படை ஊதிய வரம்பை இருமடங்காக உயர்த்தியுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு ஜனவரியில், கூகுள் தனது உயர் அதிகாரிகளின் சம்பளத்தை 650,000 டாலரிலிருந்து 1 மில்லியனாக உயர்த்தியது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!

இதையடுத்து, மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் உலகளாவிய தகுதி பட்ஜெட்டை இரட்டிப்பாக்கியது. இது குறித்து மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தனது ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், மைக்ரோசாப்ட் உலகளாவிய தகுதி வரவு செலவுத் திட்டத்தை ஏறக்குறைய இரு மடங்காக உயர்த்தியுள்ளது என்றும் அது அவர்களின் தொழில் வாழ்க்கையின் நடுவில் உள்ளவர்களுக்கு அதிக ஊதியத்தை ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளார். இது அந்த நிறுவனத்தின் வழக்கமான ஊதிய பட்ஜெட்டை விட அதிகமாகும்.

Exams Daily Mobile App Download

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் (Infosys) தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக வெளியாகியுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் தனக்கு இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கு சுமார் 12% முதல் 13% சம்பள உயர்வு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு 20% முதல் 25% சம்பள உயர்வு வழங்கவும், போனஸ் வழங்கவும், சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு இன்னும் சிறந்த பதவிகள் வழங்கவும் இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இதுபோக, சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு ஏஐ, மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்ப திறன்களை கற்றுக்கொள்ள இன்ஃபோசிஸ் வாய்ப்பு வழங்குகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!