TCS நிறுவன ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இந்த ஆண்டில் மீண்டும் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!

0
TCS நிறுவன ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இந்த ஆண்டில் மீண்டும் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!
TCS நிறுவன ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இந்த ஆண்டில் மீண்டும் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!
TCS நிறுவன ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இந்த ஆண்டில் மீண்டும் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!

கொரோனா தொற்றுக்கு பிறகு மீண்டும் வழக்கம் போல செயல்பட துவங்கி இருக்கும் IT நிறுவனமான TCS தனது ஊழியர்களுக்கு இந்த ஆண்டில் சம்பள உயர்வை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

சம்பள உயர்வு

நாடு முழுவதும் கொரோனா 3ம் அலை தொற்று ஓய்ந்து வந்ததற்கு பிறகு இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது ஊழியர்களை மீண்டுமாக அலுவகம் வரவழைக்க முடிவு செய்திருக்கிறது. இது தவிர, ஹைபிரிட் முறைப்படி தனது ஊழியர்களுக்கு வேலை நேரத்தை வழங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் TCS நிறுவன ஊழியர்கள் இந்த ஆண்டில் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது TCS நிறுவனத்தின் நிகர லாபம் தற்போது 7% அதிகரித்து ரூ.9,926 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் வருவாய் முதல் முறையாக ₹50,000 கோடியைத் தாண்டி இருக்கிறது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு அமல்? வலுக்கும் கோரிக்கை!

அதாவது, TCS நிறுவனத்தின், மார்ச் காலாண்டின் வருவாய் கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 16% அதிகரித்து ரூ.50,591 கோடியாக இருந்தது. அதாவது, மார்ச் மாத காலாண்டிற்கான டாலர் வருவாய், நிலையான நாணயத்தில் 14.3% வளர்ச்சியடைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 6.7 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இதன் மொத்த ஒப்பந்த (TCV) மதிப்பு $11.3 பில்லியன் ஆகும். இது தவிர 2022ம் நிதியாண்டில் TCS நிறுவனம் அதன் மிக உயர்ந்த வருவாயில் கூடுதலாக $3.5 பில்லியன் மற்றும் TCV $34.6 பில்லியனை பதிவு செய்துள்ளது.

இது குறித்து TCS தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் நிர்வாக இயக்குநர் (MD) ராஜேஷ் கோபிநாதன், IT நிறுவனம் கடந்த நிதியாண்டில் 6-8% வரை சம்பள உயர்வை வழங்கியது என்றும் 2023ம் நிதியாண்டில் இதே போன்ற அதிகரிப்புகளை வழங்க எதிர்பார்க்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே டிசிஎஸ் ஒரு காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பணியாளர்களை சேர்த்துள்ளது. அந்த வகையில் ஜனவரி-மார்ச் 2022 காலாண்டில் மட்டும் சுமார் 35,209 பேர் இந்நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டனர். இவ்வளவு பெரிய பணியாளர்கள் கூடுதலாக இருந்த போதிலும், TCS இன் IT சேவைகளின் குறைப்பு விகிதம் தொடர்ந்து 17.4% ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!