தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் கோரிக்கை! அறிவிப்பு வெளியாகுமா?
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானிய கோரிக்கையின்போது, அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊதிய உயர்வு அறிவிப்பு:
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.இந்தியாவில் சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. ஆனாலும், அதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. கொரோனா பேரிடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகிறோம்.கொரோனாவால் மருத்துவர்கள் உயிரிழந்த போதும், இங்கு தன்னலமின்றி தொடர்ந்து அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறோம். இருப்பினும் இங்கு எப்போதுமே அரசுக்கு உறுதுணையாக உள்ள அரசு மருத்துவர்கள் மீது முதல்வர் பார்வை விழவில்லை என்பது தான் ஏமாற்றமளிக்கிறது.
தமிழகத்தில் நாளை (ஏப்.26ம் தேதி) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதுவும் புதிய ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆக உள்ள நிலையில் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற வலி ஒவ்வொரு மருத்துவரிடத்தும் அதிகமாகவே இருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடமிருந்து இதுவரை நிவாரணம் தரப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சுகாதாரத் துறையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தன் ஆர்வத்தை நம் முதல்வர் வெளிப்படுத்தி உள்ளார்கள். அதே நேரத்தில் உலகிலேயே தமிழகத்தில் தான் மருத்துவர்கள் தங்களின் சம்பளத்திற்காக, பல வருடங்களாக, தொடர்ந்து போராடி வருகிறார்கள் என்பதை இந்த நேரத்தில் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ExamsDaily Mobile App Download
மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர செலவினம் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவது ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரை பணியாற்றி வரும் இளைய மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கும். குறிப்பாக எத்தனையோ சவால்களை சந்தித்து வரும் அரசுப் பணியில் இருக்கும் முதல் தலைமுறை மருத்துவர்களை ஊக்குவிப்பதாக அமையும். மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களின் ஊதியத்தை விட, தமிழகத்தில் பணி செய்யும் சிறப்பு மருத்துவர்களின் ஊதியம் மிக குறைவாக இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார். வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ள சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின் போது, அரசு மருத்துவா்களுக்கான ஊதிய உயா்வு அறிவிப்பை வெளியிடப்பட வேண்டும் என்றாா்.