மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பள உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பள உயர்வு - விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பள உயர்வு - விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பள உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி விரைவில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நிலுவைத் தொகையும் சேர்த்து கிடைக்க போவதாகவும் கூறப்படுகிறது.

அகவிலைப்படி:

இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா பெருந்தொற்று பரவுவதால் மத்திய மாநில அரசுகள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் 2022, ஜனவரி 1 முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தகவல் வந்துள்ளது.

சனிக்கிழமை காலை 9 மணிவரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – காவல்துறை உத்தரவு!

மேலும் அகவிலைப்படி 34 சதவீதம் அளிக்கப்பட்டால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபர் ரூ.6,120 வரை கூடுதல் தொகை பெறுவார். அடிப்படை சம்பளம் ரூ.56,900 எனில் 34 சதவீத அகவிலைப்படி உயர்வின் படி ரூ.19,346 கூடுதல் தொகையாக கிடைக்கும். இதனால் 34 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி விரைவில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதனை தொடர்ந்து ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இருக்கும் நிலுவைத் தொகையும் சேர்த்து கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் கிடைக்கும். அதன்படி பிட்மெண்ட் தொகை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை ஊதியம் 18,000 திலிருந்து 28 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!