TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 8% வரை சம்பள உயர்வு! முழு விவரம் இதோ!

0
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 8% வரை சம்பள உயர்வு! முழு விவரம் இதோ!
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 8% வரை சம்பள உயர்வு! முழு விவரம் இதோ!
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 8% வரை சம்பள உயர்வு! முழு விவரம் இதோ!

முன்னணி IT நிறுவனமான TCS நடப்பு நிதியாண்டில் ஊழியர்களுக்கு 5% முதல் 8% வரை ஊதிய உயர்வுகளை அளிப்பதாக அறிவித்துள்ளது. இது தவிர இந்த நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு எண்ணிக்கையும் கடந்த காலாண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது.

சம்பள உயர்வு

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப (IT) சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 14,136 ஊழியர்களை புதிதாக சேர்த்துள்ளது. இதன் மூலம், ஜூன் 30ம் தேதி நிலவரப்படி TCS நிறுவனத்தின் ஒட்டு மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 606,331 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 19.7% ஆக பதிவாகியுள்ளது. இது போன்ற ஏற்ற, இறக்கமான சூழல்களுக்கு மத்தியில் TCS நிறுவன ஊழியர்களுக்கு 8% வரை சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான தற்செயல் விடுப்பு – முக்கிய அறிவிப்பு!

இது குறித்து TCS நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட் கூறுகையில், ‘எங்கள் வருடாந்திர இழப்பீட்டு மதிப்பாய்வை தொடர்ந்து, ஊழியர்கள் 5% முதல் 8% வரை சம்பள உயர்வுகளைப் பெற்றுள்ளனர். மேலும், சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் இன்னும் பெரிய உயர்வைப் பெறுகிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், TCSன் புதிய பணியமர்த்தல் வேகம் ஒவ்வொரு காலாண்டிலும் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது தவிர கொரோனா பரவல் காலங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் படி அனுமதிக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைப்பதில் இந்நிறுவனம் ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன்படி, ஜூன் காலாண்டில் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு திரும்பும் திட்டத்தை படிப்படியாக செயல்படுத்துவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை TCSல் சுமார் 20% பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறார்கள். இதை தொடர்ந்து மொத்த ஊழியர்களையும் அலுவலகத்திற்கு வரவழைத்த பின்னர் TCS கலப்பின வேலை மாதிரியில் செயல்பட திட்டமிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!