சர்வர் பிரச்சனையால் சம்பள பட்டியல் இணையதளம் முடக்கம் – தமிழக அரசு ஊழியர்கள் அவதி!

0
சர்வர் பிரச்சனையால் சம்பள பட்டியல் இணையதளம் முடக்கம் - தமிழக அரசு ஊழியர்கள் அவதி!
சர்வர் பிரச்சனையால் சம்பள பட்டியல் இணையதளம் முடக்கம் - தமிழக அரசு ஊழியர்கள் அவதி!
சர்வர் பிரச்சனையால் சம்பள பட்டியல் இணையதளம் முடக்கம் – தமிழக அரசு ஊழியர்கள் அவதி!

தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தை பதிவேற்றம் செய்யும் சம்பள பட்டியல் இணையதளம் சர்வர் பிரச்சனையால் முடங்கியுள்ளது.

இணையதளம் முடக்கம்:

தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியம் சார்ந்த தகவல்கள் அனைத்தும் ஒரு இணையதள பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டு, தமிழக கருவூலத்தில் இருந்து அவர்களின் வங்கிக் கணக்கில் அவர்களுக்கான மாத ஊதியம் செலுத்தப்பட்டு வந்தது. இந்த இணையம் சார்ந்த செயல்முறைகள் அனைத்தும் கடந்த அதிமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது. அப்போது இருந்தே இந்த இணையத்தில் பழுது அதாவது, “சர்வர்” பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் திறப்பு – சுழற்சி முறையில் வகுப்புகள்!

இதனை அடுத்து, அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவது என்பது முடியாமல் இருந்து வந்தது. இதையடுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளதால், இந்த இணையதள பிரச்சனை முடிவுக்கு வரும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வரை இந்த பிரச்சனை தீராத தலைவலியாக இருந்து வருகிறது. இதனால், இந்த இணைய பக்கத்தை ஊழியர்கள் தற்போது வரை கண்காணித்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும், ஆகஸ்ட் மாத சம்பளத்துக்கு, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், நான்கு நாட்களாக இணையதளத்தில் தகவல்களை பதிவேற்ற முயற்சித்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை இந்த சர்வர் பிரச்சனை முடிவுக்கு வந்த பாடில்லை. இதனால், இந்த பிரச்சனைகள் எப்போது முடிவுக்கு வரும், எப்போது சம்பளம் பெறுவோம் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!