தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு:

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின்பு போக்குவரத்து வாகனங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. தற்போதைய தமிழக அரசு மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தால் பல ஏழை பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இதை தவிர விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் தேவைகளை அறிந்து உடனடியாக அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் சென்னை மாநகரத்தில் முதன் முறையாக பெண்களுக்கு என்று பிங்க் பேருந்து வசதி திட்டம் அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றி வருகிறது. மேலும் கொரோனா பரவல் காரணமாக நிதி நெருக்கடி அதிகமாக இருந்தது. இதனால் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, நிலுவை தொகைகள் போன்றவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழகத்தில் செப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ.2,012ல் இருந்து ரூ.7,981 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் எனவும் நடத்துனர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ9,329 வரையிலும் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here