தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அரசுக்கு வலியுறுத்தல்!

0
தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அரசுக்கு வலியுறுத்தல்!

தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் (TNSTC) பணிபுரியும் ஊழியர்கள் 14வது சம்பள பேச்சுவார்த்தை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) இந்திய தொழிற்சங்க மையத்துடன் (CITU) இணைந்து நவ.22ம் தேதி காலை 9 மணி முதல் பல்வேறு இடங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும், இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்த மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள MCB டிப்போவில் சுமார் 50 போராட்டக்காரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு – ஹெல்ப் லைன் எண்ணில் மாற்றம்!

அந்த வகையில் மதுரை மாநகரில் உள்ள TNSTC டெப்போக்கள், 14வது சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் 2019 செப்டம்பரில் 13வது ஊதிய தீர்வாய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், 14வது ஊதிய தீர்வை ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போது திமுக கட்சியின் தலைமையில் முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து, 6 மாதங்கள் ஆகியும், 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றம் அளித்ததாக MCBயின் CITU செயலாளர் திலிப் குமார் கூறியுள்ளார். இது தவிர நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) தொகையை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், பணப் பலன்கள் மற்றும் ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு வழங்கவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து TNSTCயில் ஏற்பட்டுள்ள பணியாளர்கள் பற்றாக்குறையை தடுக்க புதிய ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணமும் போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பேருந்திற்கு பொதுவாக ரூ.5,000 வரை வசூல் ஏற்படுகிறது. ஆனால் தற்போது இலவச பயணத்தால், நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த சேவையை பயன்படுத்தினாலும் ரூ.1,000 கூட வசூலிக்கப்படவில்லை.

கிடுகிடுவென சவரனுக்கு ரூ.768 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமின்றி ரூ.1,200 ரூபாய் வரை அன்றாட செலவினங்களுக்காக செலவழிக்கும் பேட்டா பணமும் மறுக்கப்படுகிறது. அதனால் அரசாங்கம் எங்களுக்கு ஒரு நிலையான தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இப்போது இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!