தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு? முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு? முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில், கண்டிப்பாக உடன்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதிய உயர்வு:

தமிழகத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 14வது ஊதிய உயர்வினை அமல்படுத்த வேண்டும் என போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனிடையே, ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் பல ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 7ம் கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. கண்டிப்பாக இந்த 7ம் கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தமிழக அரசில் நிலவி வரும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மட்டுமே போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் சிக்கல் நிலவி வருகிறது.

TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 24) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

மேலும், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெறும் இந்த 7 ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் போக்குவரத்துத்துறை அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும், இந்த 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கண்டிப்பாக இந்த 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 14வது ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here