மாநில அரசு ஊழியர்களுக்கு அக்டோபரில் சம்பள உயர்வு – DA மற்றும் TA நிலவரம்!

1
மாநில அரசு ஊழியர்களுக்கு அக்டோபரில் சம்பள உயர்வு - DA மற்றும் TA நிலவரம்!
மாநில அரசு ஊழியர்களுக்கு அக்டோபரில் சம்பள உயர்வு - DA மற்றும் TA நிலவரம்!
மாநில அரசு ஊழியர்களுக்கு அக்டோபரில் சம்பள உயர்வு – DA மற்றும் TA நிலவரம்!

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் சம்பள உயர்வு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில் DA மற்றும் HRA அதிகரிப்புடன் டிராவலிங் அலவன்ஸ் (TA) தொகையும் கணிசமாக அதிகரிப்பதாக தெரிகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

TA உயர்வு

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வுத் தொகை கடந்த ஜூன் மாத தவணையுடன் திரும்ப கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது பல்வேறு மாநில அரசுகளும் DA உயர்வை செயல்படுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள படி அக்டோபர் மாதத்தில் பீகார், உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஊழியர்களும் வங்கி கணக்கில் வரும் சம்பளத்துடன் இந்த கூடுதல் பலனைப் பெற உள்ளனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு – அமைச்சர் விளக்கம்!

இப்போது மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை அதிகரித்தவுடன், ஊழியர்களின் வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA) மற்றும் டிராவலிங் அலவன்ஸ் (TA) ஆகியவையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் உயர்வுகள் மற்றும் கணக்கீடு குறித்த விவரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில்,

HRA உயர்வுடன் மற்றொரு நன்மை:

இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு DRA 25 சதவிகிதத்தை தாண்டிய பிறகு HRA விகிதமும் கணிசமாக அதிகரித்துள்ளது. இப்போது மத்திய அரசு ஊழியர் 8, 16 மற்றும் 24 சதவிகிதத்திற்கு பதிலாக 9, 18 மற்றும் 27 சதவிகிதத்தில் HRA தொகையை பெறுவார்கள். தொடர்ந்து 7 வது சம்பள கமிஷனுக்காக உருவாக்கப்பட்ட குழு புதிய ஊதிய விகிதத்தை அமல்படுத்துவதோடு HRA இன் ஸ்லாபையும் நிர்ணயித்துள்ளது. இருப்பினும், இது மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.5400 ஆக வைக்கப்பட்டுள்ளது.

அடிப்படை சம்பளம்: மாதம் குறைந்தபட்சம் ரூ.24200.

முன்னதாக கிடைக்கும் DA தொகை (17%) = மாதம் ரூ.4114.

DA (11 சதவீதம்) உயர்வு = மாதம் ரூ.2662 அதிகரிப்பு.

இப்போது கிடைக்கும் மொத்த DA (28 சதவீதம்) = மாதம் ரூ.6776

மெட்ரோ தொழிலாளர்களுக்கான போக்குவரத்து உதவித்தொகை (TA) = மாதம் ரூ.4608.

மொத்த சம்பளம் – மாதம் ரூ.35,584 (HRA & பிற சலுகைகள் தவிர)

TA நன்மைகள்:

இப்போது நிலை 1 முதல் 2 வரையிலான ஊழியர்களுக்கு TA தொகை ரூ.1152 முதல் ரூ.4608 வரை அளிக்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில், நிலை 3 முதல் நிலை 8 வரையிலான ஊழியர்கள் மாதத்திற்கு ரூ.2304 முதல் ரூ.4608 வரை TA தொகையை பெறுவார்கள். தொடர்ந்து நிலை 9 மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ரூ.4608 முதல் ரூ .9216 வரை கொடுப்பனவுகள் கிடைக்கும். இந்த TA தொகை ஊழியர்களின் DA அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கும்போது, உதவித்தொகையும் அதிகரிக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. லண்டன்ல காய் பரிக்க வருடத்திற்கு 68 லட்சம் தர்றாங்க … இந்தியாவில் அரசூழியர்களுக்கு வருடத்திற்கு 4.20 லட்சம் …. இங்கு என்ன தான் பிரச்சனைனு புரியலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!