தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஊதிய உயர்வு அமல்!
தமிழக டாஸ்மார்க் ஊழியர்களின் ஊதியத்தை அரசு ஊழியர்களுக்கு இணையாக உயர்த்துவதற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் அரசு விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டாஸ்மார்க் ஊழியர்களுக்கான ஊதியம்:
தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளின் மூலம் மதுபான விற்பனையை அரசு தன் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தி வருகிறது. டாஸ்மார்க் நிறுவனங்களுக்கான ஊழியர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்படுகின்றனர். மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என 24 ஆயிரம் பேர் தமிழக டாஸ்மார்க் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அரசு நிர்ணயித்த வேலையை விட மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணத்தை விதித்துள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
மதுபானத்திற்கு ₹ 10க்கு மேல் கூடுதலாக விற்கும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். ஏற்கனவே இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் அரசு தெரிவித்திருந்தது. ஆனால் டாஸ்மார்க் ஊழியர்கள் மிகவும் குறைவான ஊதியத்தில் பணியாற்றுவதன் காரணமாகத்தான் இது போன்ற தவறுகளில் ஈடுபடுவதாகவும், அரசு ஊழியர்களுக்கு இணையாக டாஸ்மார்க் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று டாஸ்மார்க் ஊழியர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் மீண்டும் உச்சத்தை எட்டும் காய்கறிகளின் விலை – மார்க்கெட் விலை விவரங்கள்!
இந்த கோரிக்கையை ஏற்று டாஸ்மார்க் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடருக்கு பின் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.