பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் கோரிக்கை!!
பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.10,000 சம்பளம் பெற்று வரும் நிலையில் கூடுதலாக ரூ.20,000 சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்:
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என திமுக சார்பில் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது வரையிலும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. தற்போது வரையிலும் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.1000 மட்டுமே தொகுப்பூதியமாக பெற்று வருகின்றனர். இதனை அரசு கைவிட்டு பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனவும், ரூ.20000 கூடுதலாக சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிக கனமழை கொட்டி தீர்க்கும் – வானிலை மைய எச்சரிக்கை!
மேலும், பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் மேற்கொண்டும் அரசு தற்போது வரையிலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனிடையே, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எந்த வித சலுகையும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே, அரசு உடனடியாக பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும், ரூ.30,000 சம்பளம் மற்றும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.