மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 31% அகவிலைப்படியை பெறுகின்றனர். இதனை தொடர்ந்து மீண்டும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சம்பள உயர்வு

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு நிதி நெருக்கடி நிலையை அரசு எதிர்கொண்டு வந்தது. அதனால் நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. அத்துடன் 18 மாத நிலுவை தொகையும் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி 31% ஆக அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர்.

RRB வேலைவாய்ப்பு: இந்திய ரயில்வேயில் மொத்தம் 2.65 லட்சம் காலிப்பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது வழக்கமாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு தொடங்கிய நிலையில் இது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் அமைப்புகள் தங்களுக்கு வழங்கப்படும் fitment factor-ஐ உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தற்போது பல ஊடகங்களின் ஆய்வின் படி fitment factor உயர்த்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்படி fitment factor ஐ 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக அதிகரித்தால் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமும் அதிகரிக்கப்படும். இவ்வாறு உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 8000 ரூபாய் வரை உயர்த்தப்படும். அதனால் தற்போது பெற்ற வருகிற ஊழியர்களின் சம்பளம் ரூ. 18,000 யிலிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும். இதற்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!