விஜய் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு விரும்பி பார்க்கப்பட்டு வரும் சேனல்களின் வரிசையில் முதலிடம் பெறுவது விஜய் தொலைக்காட்சி தான். அவ்விதமாக விஜய் டிவியும் புது புது ஷோக்களை அறிமுகப்படுத்தி மக்களை என்டேர்டைன் செய்து வருகிறது. இவ்வாறு சின்னத்திரையில் நடித்தும் பல ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மனதை ஈர்த்தும் வரும் நட்சத்திரங்கள் பலர். தற்போது அவர்களின் ஒரு நாள் சம்பள விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஒரு நாள் சம்பளம்:

விஜய் தொலைக்காட்சியில் மெகா ஹிட் சீரியலாக வலம் வந்து தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரமான பாக்கியா (சுஜித்ரா) ஒரு நாளைக்கு 5000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். அதே சீரியலில் இனியாவாக நடித்து வரும் நேஹா மேனன் ஒரு நாள் 3000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். மேலும் திவ்யா என்பவர் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 4,500 வாங்கி வருகிறார்.

ராதிகா, பாக்கியாவிடம் ஒருவழியாக மாட்டிக் கொண்ட கோபி – சீரியலில் அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

அடுத்ததாக அண்ணன் தம்பிகளின் பாசத்தை விலக்கி 900 எபிசோடுகளை கடந்தும் வெற்றி பாதையில் பயணிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணியாக நடித்து வரும் சுஜிதா ஒரு நாள் 12,000 ருபாய் சம்பளமாகவும், முல்லையாக நடித்து வரும் காவியா 4000 ரூபாயும், ஹேமா ஒரு நாள் 6500 ரூபாயும் சம்பளம் பெறுகிறார்கள். பிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரினா ஒரு நாள் சம்பளமாக 10,000 ரூபாய் பெற்று வருகிறார்.

Exams Daily Mobile App Download

பிரியங்கா என்பர் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடித்து ஒரு நாள் சம்பளம் ரூபாய் 5000 வாங்கி வருகிறார். அதே சீரியலில் நடித்து வரும் ஸ்ரீதேவி அசோக் என்பவர் 5,000 ரூபாய் ஒரு நாள் சம்பளமாக வாங்கி வருகிறார். நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வரும் காயத்ரி ஒரு நாள் சம்பளமாக 5500 ரூபாயும், பாவம் கணேசன் சீரியலில் நடித்து வருகிற நேகா கவுடாவுக்கு ஒரு நாள் சம்பளம் 6000 ரூபாயும் வாங்கி வருகிறார். மேலும், ரவீனா என்பவர் மௌனராகம் சீரியலில் நடித்து ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 6000 பெறுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!