விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ தொகுப்பாளர் ரக்ஷன் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' தொகுப்பாளர் ரக்ஷன் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' தொகுப்பாளர் ரக்ஷன் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ தொகுப்பாளர் ரக்ஷன் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஹிட் கொடுத்து வரும் ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்நிகழ்ச்சியில் இரு சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் மூன்றாவது சீசனும் வெற்றி பாதையில் நகர்கிறது. இதில் முக்கிய பங்காக இருக்கும் தொகுப்பாளரான ரக்சன் அவர்களுக்கு ஒரு நாள் சம்பள விவரம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் புது புது ஷோக்கள் வந்த மயமாகத்தான் உள்ளது. சிலது சூடு பிடிக்கும், சிலது ஆரம்பத்திலே சொதப்ப விடும். ஆனால் ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களை சிரிக்க வைக்கும் வகையில் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் குடும்ப நிகழ்ச்சியாக உருமாறி ஹிட் கொடுக்கும் ஷோ தான் குக் வித் கோமாளி. ஆரம்பத்திலேயே ரசிகர் பட்டாளத்தை குவித்த பெருமை இந்நிகழ்ச்சிக்கு மட்டுமே சேரும். இந்த அளவுக்கு வளர்ச்சிக்கு காரணம் கோமாளிகள் மட்டுமல்லாமல் அதிலிருக்கும் போட்டியாளர்கள், தொகுப்பாளர் ரக்ஷன் என அனைவரும் கொடுக்கும் கவுண்டர்களுக்கும், மொக்கை ஜோக்குகளும் தான்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இவ்வாறு சீசன் 1 வெற்றி கொடுத்தது போலவே சீசன் 2 ம் மெகா ஹிட் பெற்று தற்போது சீசன் 3 வெற்றி பாதையில் நகர்கிறது. விஜய் டிவியை பொறுத்தவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களை தொடங்கி தொகுப்பாளர் வரை அனைவரையும் பிரபலமாக்குவதை தனது கடமையாக செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 1,2,3 என மூன்றையும் தொகுத்து வழங்கும் ரக்ஷன், ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக அறிமுகமானார்.

Exams Daily Mobile App Download

இதனைத்தொடர்ந்து பல ஷோக்களில் தொகுப்பாளாராக பணியாற்றினாலும் இந்த குக் வித் கோமாளி ஷோ கொடுத்த புகழுக்கு அளவே இல்லை. முதல் சீசனில் நிஷா அவருடன் இணைந்து தொகுத்து வழங்கினார். அதன் பிறகு கடந்த சீசனும், 3வது சீசனையும் ரக்ஷன் தான் தொகுத்து வழங்குகிறார். இவ்வாறு ஆங்கராக உயர்ந்து வரும் ரக்ஷனுக்கு சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியிலும் சிறந்த தொகுப்பாளருக்கான விருதும் கிடைத்தது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 3ல் ரக்ஷன் ஒரு எபிசோடுக்கு சம்பளமாக 1 லட்சம் ருபாய் பெறுவதாக விவரம் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here