விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணியின் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் அண்ணியின் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் அண்ணியின் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணியின் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

ஆயிரம் எபிசோடுகளை நோக்கி வெற்றி பயணத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் பிரபல சீரியல் என்ற பெருமைக்கு உரிமை கொண்ட தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தகைய பெருமைக்குரிய சீரியலில் குடும்பத்துக்கே தூணாக விளங்கும் பிரபல நடிகை சுஜிதா உடன் நடிக்கும் சக நடிகர்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. ஏனெனில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு தொடரின் கதைகளில் ஒரு ஆர்வமும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகவே பார்வையாளர்கள் மத்தியில் இருக்கும். அப்பேற்பட்ட பெருமையை ஆரம்பத்தில் பெற்று ஹிட் கொடுத்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது கதைக்களம் முழுவதும் ஏதோ ஒரு ட்ராக்கில் நகர்ந்து தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் கதைக்களத்தை கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

கோபி மீது இருக்கும் சந்தேகத்தை நேரடியாக கேட்ட பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியல் நாளைய எபிசோட்!

குடும்பத்தில் உள்ளவர்களே வில்லியாக உருவெடுத்து மேற்கொள்கின்ற ஒவ்வொரு செயலும் இறுதியில் புஸ்பானம் போல் ஒன்றுமில்லாமல் முடிகிறது. மேலும், முல்லைக்கு குழந்தை பிறக்குமா? பிறக்காதா?என்ற கதையாவே 100 எபிசோடுகள் கொண்டு செல்வார்கள் போல் என ரசிகர்களும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் எப்போது தான் சீரியல் முடிவுக்கு வரும் என்ற கடுப்பில் உள்ளார்கள். இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

ஒரு நாள் சம்பளமாக,

  • மூர்த்தி – 12 ஆயிரம்
  • ஜீவா 10 ஆயிரம்
  • மீனா – 8 ஆயிரம்
  • கதிர் – 10 ஆயிரம்
  • முல்லை – 8 ஆயிரம்
  • கண்ணன் – 6 ஆயிரம்

ஆனால் தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா அவர்கள் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குணச்சித்திர கதாபாத்திரத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்பதாலோ என்னவோ அவருக்கு மட்டும் ஒரு நாள் சம்பளம் ரூ. 17 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு இவர் இந்த சீரியலில் நடிக்கும் மற்ற நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்குவது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!