விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தியை முந்திய தனம் – சம்பள விவரம் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மூர்த்தியை முந்திய தனம் - சம்பள விவரம் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மூர்த்தியை முந்திய தனம் - சம்பள விவரம் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தியை முந்திய தனம் – சம்பள விவரம் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இதில் மூர்த்தியாக நடித்து வரும் நடிகர் ஸ்டாலினை முந்தி இருக்கிறார் தனமான நடிகை சுஜிதா.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தை பெற்றிருக்கும் முக்கியமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அதிகளவு வன்முறை, பழி வாங்குதல் என்று இல்லாமல் ஒரு குடும்பத்திற்குள் நடைபெறும் வழக்கமான சண்டை, சச்சரவுகளுடன் ஒளிபரப்பாகுவதால் இதற்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம். இது தவிர தமிழில் வெளியாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து இது இந்தியாவில் சுமார் 8 மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் கணவர் மகனுக்கு கொடுத்த பரிசு – வைரலாகும் வீடியோ!

இப்போது கூட்டுக் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஸ்டாலின், வெங்கட், சுஜிதா, குமரன், காவ்யா, ஹேமா உள்ளிட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பள விவரங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் முதலாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தின் மூத்த அண்ணனான மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் முத்து ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். தொடர்ந்து நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தில் மீனவாக கலக்கி வரும் நடிகை ஹேமா ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். அதே போல ஜீவா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் ரூ.10 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்.

காதலி & திருமணம் குறித்து மனம் திறந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – ரசிகர்கள் உற்சாகம்!

தொடர்ந்து முல்லையாக நடித்து வரும் நடிகை காவ்யா ரூ.10 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். அடுத்ததாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் கடைக்குட்டி கண்ணனாக நடிக்கும் சரவணன் விக்ரம் ஒரு நாளைக்கு ரூ. 8 ஆயிரம் மற்றும் கதிராக வரும் நடிகர் குமரன் ரூ. 12 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். இப்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அதிகபட்ச சம்பளம் பெறுபவர் தனம் அண்ணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா தான். இவர் ஒரு நாளைக்கு ரூ.17 ஆயிரம் சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!