90’S கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நாயகன் ‘சக்திமான்’ மீண்டும் திரையில் – சோனி நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!

0
90'S கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நாயகன் 'சக்திமான்' மீண்டும் திரையில் - சோனி நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!
90'S கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நாயகன் 'சக்திமான்' மீண்டும் திரையில் - சோனி நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!
90’S கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நாயகன் ‘சக்திமான்’ மீண்டும் திரையில் – சோனி நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!

தொலைக்காட்சி சீரியல்கள் சினிமாவாக வந்த கதை இதுவரையிலும் நடக்காத நிலையில், தற்போது 90 களின் நாயகன் சக்திமான் சீரியலை சினிமாவாக எடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சக்திமான்:

சின்னத்திரை சீரியல்களில் தற்போதைய காலத்தில் குழந்தைகளை கவரும் படி எந்த சீரியலும் எடுக்கப்படுவதில்லை. குழந்தைகளுக்கு என்று தனியாக பல சேனல்களும் இருந்தாலும் அவற்றில் அனைத்துமே குழந்தைகளை தங்கள் வசம் இழுக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள் தான் 90 களின் குழந்தைகள். அளவான நிகழ்ச்சிகள் மட்டுமே குழந்தைகளுக்கு என்று வந்தாலும், அதில் தன்னிறைவு பெற்றவர்கள்.

தமிழக அரசு மின்சார வாரியத்தில் 45000 காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு

அதிலும், வரம் தோறும் ஞாயிற்று கிழமை அன்று முற்பகலில் வரும் சக்திமான் தொடருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் இருப்பார்கள். சூப்பர் ஹீரோ என்றாலே ஹாலிவுட்டில் இருந்து தான் வரவேண்டும் என்று இருந்த விதியை மாற்றியவர் சக்திமான். இந்த சீரியல் முதலில் ஹிந்தியில் தான் எடுக்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை வைத்து தான் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.

Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.150க்குள் கிடைக்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம்!

1997ம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை டிவியில் ஒளிபரப்பானது. இதில் சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கண்ணாவே, அந்த தொடரை தயாரித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை 90’S கிட்ஸ்களின் ஃபேவரிட் ஆக இருப்பது சக்திமான் தான். சக்திமான் சீரியலை சினிமாவாக 3 பாகங்களாக எடுக்க உள்ளதாக சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் நடிக்க, முன்னணி இயக்குநர் படத்தை இயக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!