சைனிக் பள்ளிகளில் சேர நுழைவுத்தேர்வு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
சைனிக் பள்ளிகளில் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
நுழைவுத்தேர்வு அறிவிப்பு:
நாடு முழுவதும் 23 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளிகளில் 2022-23 கல்வி ஆண்டிற்கான 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஆர்வமுள்ள மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஓய்வு வயது குறைப்பு?
அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஆர்வமுடைய மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை https://aissee.nta.nic.in என்ற இணையதள முகவரியில் பூர்த்தி செய்யும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 26ம் தேதிக்கு பின்னர் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் மாணவர்கள் அக்டோபர் 26ம் தேதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
TNPSC போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நிபந்தனைகள் வெளியீடு!
இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://aissee.nta.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடவும். அதுமட்டுமின்றி நுழைவுத்தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் தேர்வு நாளுக்கு முன் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த ஹால் டிக்கெட்டில் தேர்வரின் பெயர், அடையாள எண், தேர்வு மையம், தேதி மற்றும் இடம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.