Engineering முடித்தவர்களுக்கு SAIL நிறுவனத்தில் வேலை – 230+ காலிப்பணியிடங்கள்!

0
 Engineering முடித்தவர்களுக்கு SAIL நிறுவனத்தில் வேலை - 230+ காலிப்பணியிடங்கள்!
 Engineering முடித்தவர்களுக்கு SAIL நிறுவனத்தில் வேலை - 230+ காலிப்பணியிடங்கள்!

Steel Authority of India Limited (SAIL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technician Apprentices பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 237 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 18.01.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு  கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Steel Authority of India Limited (SAIL)
பணியின் பெயர் Technician Apprentices
பணியிடங்கள் 237
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்:

SAIL நிறுவனத்தில் காலியாக உள்ள Technician Apprentices பணிக்கு என 237 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Technician Apprentices கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Engineering பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Technician Apprentices வயது வரம்பு:

Technician Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 28 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Technician Apprentices உதவித்தொகை:

இந்த SAIL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ.8,000/- உதவித்தொகையாக பெறுவார்கள்.

SAIL நிறுவன தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Diploma-வில் பெற்ற மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு Merit List என்னும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

SAIL நிறுவன விண்ணப்பிக்கும் முறை:

Technician Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://portal.mhrdnats.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 18.01.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!