இரு மடங்கு லாபம் தரும் அரசின் சேமிப்பு திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!!

0
இரு மடங்கு லாபம் தரும் அரசின் சேமிப்பு திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!!
இரு மடங்கு லாபம் தரும் அரசின் சேமிப்பு திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!!
இரு மடங்கு லாபம் தரும் அரசின் சேமிப்பு திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!!

தற்போது மருத்துவ தேவைகள் அதிகம் உள்ள நிலையில், சேமிப்பு பணம் ஒன்று தான் மக்களை அவசர காலத்தில் காப்பாற்றி வருகிறது. அப்படிப்பட்ட பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் குறித்த குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

சேமிப்பு திட்டங்கள்:

இன்றைய பரபரப்பான வாழ்கை முறையில் மக்கள் தங்கள் உடல்நலனைப் பற்றிய கவலைகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் தொழில், பணி நிரந்தரம் போன்றவையும் நிரந்தரம் அற்றதாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் பரவி வரும் நிலையில், மக்கள் மருத்துவமனைகளில் கூட்டம் கூட்டமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது போன்ற சூழ்நிலைகளில் நமக்கு கை கொடுப்பது நமது சேமிப்பு பணம் தான். அப்படி பாதுகாப்பாக சேமிக்க பயன்படும் அரசின் திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் – அரசு எச்சரிக்கை!!

அஞ்சலக டைம் டெபாசிட்:

அஞ்சலகங்களில் 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. இத்திட்டத்தில் 6.7% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கு உண்டு. இதி குறைந்தபட்சம் டெபாசிட் 1000 ரூபாயாகும். இந்த திட்டத்தில் 5 ஆண்டு வைப்பு தொகை திட்டத்தில் கிட்டதட்ட 10 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்களில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.

அஞ்சலக சேமிப்பு கணக்கு:

வங்கிகளில் உள்ளத்தைப் போன்று அஞ்சலகத்திலும் சேமிப்பு கணக்குகள் உள்ளது. இந்த திட்டத்தில் வரி விலக்கும் உள்ளது. இதற்கு தற்போது 4% வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் உங்களது தொகை 18 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

TN Job “FB  Group” Join Now

அஞ்சல தொடர் வைப்பு கணக்கு:

அஞ்சலகங்களில் 10 வயது குழந்தைகள் கூட பராமரிக்கும் தொடர் வைப்பு நிதி கணக்கு வசதி உள்ளது. இந்த தொடர் வைப்பு கணக்கிற்கு 5.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 12 வருடம் 5 மாதங்களில் உங்கள் முதலீடு இருமடங்காக மாறும்.

அஞ்சலக மாத வருமான திட்டம்:

இந்த திட்டத்தின் மூலம் வட்டி விகிதம் 6.6% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் உங்கள் தொகையானது 10.91 ஆண்டுகளில் இருமடங்காக மாறும். இந்த திட்டத்திலும் காலாண்டுகு ஒரு முறை வட்டி விகிதம் மாறுபடும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்கள்:

அஞ்சலகத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள். காலாண்டுக்கு ஒரு முறை வட்டிவிகிதம் மாற்றப்படுகிறது. இந்த திட்டத்தில் 7.10% வட்டி தற்போது வழங்கப்படுகிறது.

காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை – மாநில அரசு அறிவிப்பு!!

பொது வருங்கால வைப்பு நிதி:

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். இந்த திட்டத்திற்கு அரசின் வரி விலக்கு உள்ளது. தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். இதில் 10.14 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.

இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது !!

சுகன்யா சமிரிதி யோஜனா:

பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில், குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும், இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும். இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமாக, 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

தேசிய சேமிப்பு பத்திரம்:

தேசிய சேமிப்பு பத்திர திட்டம் நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலக கிளைகளிலும் கிடைக்கும். மிகவும் பாதுகாப்பான இந்த திட்டத்தில், 6.8% வட்டியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10.7 ஆண்டுகளில் உங்களது முதலீடு இருமடங்காகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!