ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

0
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை வருகிற செப்டம்பர் 6ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் முன்பதிவு

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். பொதுவாக சபரி மலை ஐயப்பன் கோவிலின் நடை 60 நாட்கள் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இதை தவிர ஓணம், பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா, விஷூ பண்டிகை, ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்படும். கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமாக நடைபெறும் பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்படும்.

PM கிசான் திட்டத்தின் 12 வது தவணை எப்போது? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

இத்தினங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், கேரளாவில் கொண்டாடப்பட உள்ள ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை வருகிற 6ம் தேதி மாலை முதல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனை தொடர்ந்து 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை கோவிலின் நடை திறக்கப்படும். கோவிலின் நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் ஓணம் பண்டிகைக்கான சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

Exams Daily Mobile App Download

அத்துடன் 8ம் தேதி அன்று திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளுக்கு பிறகு கோவிலின் நடை செப்டம்பர் 10ம் தேதி அன்று இரவு 10 மணிக்கு அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து புரட்டாசி மாத பூஜைக்காக கோவிலின் நடை மீண்டும் வருகிற செப்டம்பர் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை திறக்கப்படும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!