IND vs WI: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் மகிழ்ச்சி!

0
IND vs WI: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
IND vs WI: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
IND vs WI: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் மகிழ்ச்சி!

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்திய அணியில் 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. த ற்போது இதில் இந்திய ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி:

வெஸ்ட் இண்டீஸ் இந்திய தொடருக்கான இந்திய ஒரு நாள் மற்றும் T20 அணியை ஜனவரி 27 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் BCCI அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடருக்கான வீரர்கள் அனைவரும் கடந்த ஜனவரி 31ஆம் தேதி, அகமதாபாத் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர். அப்போது நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில்தான், ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், பேக்கப் வீரர் நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புத்தகப்பை இல்லா தினம் ரத்து!

மேலும் பீல்டிங் கோச் திலிப் உட்பட 3 ஊழியர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இதனால் கொரோனா உறுதி செய்த வீரர்களை தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்திய அணியில் தொடக்க வீரர்களாகிய ஷிகர் தவன், ருதுராஜ் கெய்க்வாட் இருவருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் இவர்களுக்கு பதில் ஓப்பனிங்கில் களம் இறங்க புதிதாக மயங்க் அகர்வால் மற்றும் ராகுல் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டார்கள். இதனை தொடர்ந்து பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியிலும் , பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெற்ற 2 வது ஒருநாள் போட்டியிலும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்கள் யாரும் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs WI 3rd ODI: வெஸ்ட் இண்டிஸை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்நிலையில் தற்போது இந்திய ஒபனர் ருதுராஜ் கெய்க்வாட் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார். இதனை அகமதாபாத் மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் இதனை இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI உறுதி செய்துள்ளது. இதையடுத்து இன்று நடக்கவிருக்கும் 3 வது ஒருநாள் போட்டியில் ருத்ராஜ்க்கு இந்திய அணி வாய்ப்பளிக்கும் என்று அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!