உக்ரைனின் தலைநகரை நெருங்கும் ரஷ்ய படைகள், ஊரடங்கை அறிவித்த அரசு – அதிபர் தலைமறைவு!

0
உக்ரைனின் தலைநகரை நெருங்கும் ரஷ்ய படைகள், ஊரடங்கை அறிவித்த அரசு - அதிபர் தலைமறைவு!
உக்ரைனின் தலைநகரை நெருங்கும் ரஷ்ய படைகள், ஊரடங்கை அறிவித்த அரசு - அதிபர் தலைமறைவு!
உக்ரைனின் தலைநகரை நெருங்கும் ரஷ்ய படைகள், ஊரடங்கை அறிவித்த அரசு – அதிபர் தலைமறைவு!

ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்து கீவ் நகரின் மேயர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஊரடங்கு உத்தரவு

உலக நாடுகளை சேர்ந்த மக்கள் அச்சப்பட்டு வந்த உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் நேற்று (பிப்.24) முதல் துவங்கி இருக்கிறது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்த உக்ரனை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர விரும்பிய ரஷ்யா அதற்கான தாக்குதலை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் கடந்த வாரத்தில் உக்ரைனின் அருகே தனது போர்ப்படைகளை அனுப்பி இருந்த ரஷ்ய அரசாங்கம் அது போருக்கானது இல்லை என்று குறிப்பிட்டிருந்தது.

இனியாவிற்கு அறிவுரை சொன்ன பாக்கியா, ஜெனியை கோவித்து கொள்ளும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

ஆனால், நேற்று (பிப்.2) அதிகாலை 6 மணியளவில் எதிர்பாராத விதமாக உக்ரைனின் தலைநகர் கீவில் தனது முதல் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ரஷ்யா. இந்த அதிரடியான நடவடிக்கையால் நிலைகுழைந்த உக்ரைன் நாட்டு மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். மேலும் தலைநகர் கீவில் இருந்து வெளியேற துவங்கி உள்ளனர். அதே போல தற்போது போருக்காக ஆயத்தமாகி இருக்கும் உக்ரைன் அரசாங்கமும் போராயுதங்களை வழங்கி தனது நாட்டு மக்களை தயார்படுத்தி வருகிறது.

அதே நேரத்தில் உக்ரைன் மீதான முதல் நாள் போரில் வெற்றி பெற்றதாக அறிவித்த ரஷ்ய அரசாங்கம், உக்ரைனுக்கு ஆதரவாக எந்தவொரு நாடு குறுக்கிட்டாலும் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சூளுரை விதித்திருக்கிறார். இந்நிலையில் இந்த போர் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அப்பா யார் என கேட்ட லட்சுமி, பாரதி சொன்ன நெகிழ்ச்சியான பதில் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

இப்போது ரஷ்யாவின் படையெடுப்பை முறியடிக்க உக்ரைன் போராடி வரும் நிலையில், உக்ரைனின் தலைநகரில் இரவு ஊரடங்கு உத்தரவை விதித்து கீவ் நகரின் மேயர், விட்டலி கிளிட்ச்கோ உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் உக்ரைனில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, உள்ளூர் நேரப்படி இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை (2000-0500 GMT) நீடிக்கும் என்றும் அந்த காலகட்டத்தில் பொது போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மெட்ரோ நிலையங்கள் முழுவதும் வெடிகுண்டு முகாம்களாக செயல்பட திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!