உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அமல் – ரஷ்யாவின் போர் அபாயம்! பதட்டத்தில் உலக நாடுகள்!

0
உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அமல் - ரஷ்யாவின் போர் அபாயம்! பதட்டத்தில் உலக நாடுகள்!
உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அமல் - ரஷ்யாவின் போர் அபாயம்! பதட்டத்தில் உலக நாடுகள்!
உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அமல் – ரஷ்யாவின் போர் அபாயம்! பதட்டத்தில் உலக நாடுகள்!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் எந்நேரமும் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தற்போது உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

போர் பதற்றம்

சோவியத் ஒன்றிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் அதிலிருந்து விலகியவுடன், உக்ரைனை தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ரஷ்யா நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் உக்ரைனை ஆக்கிரமிக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வரும் ரஷ்யா இப்போது போர் மூலம் அந்நாட்டை தன் வசப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த வாரத்தில் உக்ரைனின் எல்லைப்பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் போர்ப்படை வீரர்களை நிறுத்தி இருந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்க இருப்பதாக சூசகமான தகவலை கொடுத்திருந்தது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – விரைவில் ஸ்மார்ட் கார்டுகள்!

இதனை சுதாரித்து கொண்ட உலக நாடுகள் ரஷ்யாவின் மீது கடும் கண்டனம் தெரிவித்து, உக்ரைனில் வசிக்கும் தங்களது நாட்டவர்களை திரும்ப அழைத்து கொண்டது. இதற்கிடையில் சர்வதேச பாதுகாப்பு கருதி உக்ரைன், நேட்டோவின் நட்பு நாடுகளுடன் இணைந்திருக்கிறது. இதற்கும் ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதாவது, உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அதற்கான பாதுகாப்பு பலப்படுவதோடு, உக்ரைனை கைப்பற்றுவதில் அமெரிக்காவின் ஆதிக்கம் இருக்கும் என்று ரஷ்யா அச்சப்படுகிறது.

என்றாலும் தன்னுடைய முடிவில் விடாப்பிடியாக இருந்து வரும் ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தன்னாட்சி நகரங்களாக அறிவித்தது. இதன் மூலம் தனது படைகளை உக்ரைனுக்குள் அனுப்பி இருக்கும் ரஷ்ய அதிபர் புதின் இது வெறும் பாதுகாப்பிற்காக தான் என்று விளக்கம் அளித்துள்ளார். இப்போது ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது.

TNPSC குரூப் 2, 2A வயது வரம்பு அதிகரிப்பு, தேர்வு நேரம் மாற்றம் – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

இதனை தொடர்ந்து உக்ரைன் எல்லையையொட்டி 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரஷ்ய போர்ப்படைகளின் புகைப்படம் சாட்டிலைட் மூலம் வெளியாகியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். அந்த வகையில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து அவசர நிலை பிரகடனம் மற்ற அனைத்து பகுதிகளிலும் இருக்கும்.

இந்த உத்தரவானது, அடுத்த 30 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் இக்கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரைனின் பாதுகாப்பு கவுன்சில் ரஷ்யாவில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை விரைவில் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கு மத்தியில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சு வார்த்தைக்கு வருமாறு உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏனென்றால் ரஷ்யா மற்றும் உக்ரைனில் போர் நிகழ்ந்தால் அது 3ம் உலகப்போருக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் மீண்டும் உலக பொருளாதாரம் பல ஆண்டுகள் பின்னோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!