TNPSC தேர்வர்களுக்கு அலர்ட்.. அதிகரிக்கும் வதந்திகள் – அதிகாரிகள் எச்சரிக்கை!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஜூலை 2 ஆம் தேதி ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வு முடிவுகள் குறித்த முடிவுகள் வெளியாகி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியை நம்ப வேண்டாம் என தேர்வாணையம் எச்சரித்துள்ளது.
TNPSC தேர்வுகள்:
TNPSC சார்பில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த போட்டித்தேர்வுகள் மூலமாகவே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு துறை சார்ந்த தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் குரூப் 4 தேர்வுகளை ஜூலை 24 ஆம் தேதி நடத்தியது. அதற்கு முன்னதாக ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான போட்டித் தேர்வு ஜூலை 2 ஆம் தேதி நடத்தப்பட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில் இன்னும் இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியாகவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதாகவும், அதனை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இந்த செய்தி போலியானது என TNPSC விளக்கம் கொடுத்து இருக்கிறது. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதாக பரவும் செய்தி போலியானது என TNPSC தெரிவித்துள்ளது.
இது குறித்து TNPSC அதிகாரி கூறுகையில், ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகள் குறித்த செய்திகள் இணையத்தில் பரவி வருவது போலியானது, அதனை யாரும் நம்ப வேண்டாம், இது போல தவறான செய்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் டி.என்.பி.எஸ்.சி.,யின் அனைத்து தேர்வு முடிவுகளும், www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதன் மூலம் மட்டுமே தேர்வர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது