CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த வதந்தி – அதிகாரி விளக்கம்!
CBSE 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக CBSE கல்வி வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதால் அவை போலியானவை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
கொரோனா 2 ஆம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டதான 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 31 ஆம் தேதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என CBSE கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தேர்வு முடிவுகள் குறித்த தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகிறது. இது தொடர்பாக CBSE அதிகாரி ஒருவர் விளக்கம் அளிக்கையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இந்த ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து சமீபத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
மக்களே உஷார்.., அதிவேக பாதிப்புகளை ஏற்படுத்தும் டெல்டா வைரஸ் – அமெரிக்க ஆய்வு குழு தகவல்!
அதனால் அந்த தகவல்கள் போலியானதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE), ICSE மற்றும் ISC மாணவர்களுக்கான தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளை அறிவித்தது. இதை தொடர்ந்து CBSE மாணவர்களும் தங்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள படி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ cbse.gov.in மற்றும் cbse.nic.in வலைதளங்களில் வெளியிடப்பட உள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும் cbseresults.nic.in என்ற நேரடி இணைப்புகள் மூலமும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்தியாவில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீவிரித்து வந்த கொரோனா நிலையை கருத்தில் கொண்டு CBSE வாரிய தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கான தேர்வு மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான மாற்றுத் திட்டத்தை பின்பற்ற நிர்வாகம் முடிவு செய்தது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி முடிவுகள் ஜூலை 20க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தாமதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.