தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் – விதிமுறைகள் மாற்றம்! அரசாணை வெளியீடு!

0
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் - விதிமுறைகள் மாற்றம்! அரசாணை வெளியீடு!
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் - விதிமுறைகள் மாற்றம்! அரசாணை வெளியீடு!
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் – விதிமுறைகள் மாற்றம்! அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏராளமானோர் வேலையிழந்து சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலை உருவாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தற்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு திட்டம்:

தமிழகத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ம் ஆண்டுகளில் கொரோனா எனும் கொடிய வகை வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடியது. இதனை தடுக்க ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்தனர். இந்த கால கட்டத்தில் வேலைவாய்ப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வந்தது. இதனால் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டனர். அப்போது அரசு மக்களின் நலன் கருதி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைகளை உருவாக்கி தரும் நோக்கில் செயல்பட்டது.

தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து வசதி – அரசு அறிவிப்பு!

இந்த திட்டம் அரசு நிதியின் கீழ் 2011ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மேலும் இதில் பயன் பெற விரும்பும் பொதுப்பிரிவினருக்கு வயது 18 முதல் 35 வரையும் அதே மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், பெண்கள், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்சமான வயது 45 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கல்வி தகுதி 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என்றும் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்று நிபந்தைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த விதிகளில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு தளர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற அதிகபட்ச வயதாக 45 முதல் 55 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு கல்வித்தகுதி நிபந்தனையும் நீக்கப்பட்டு அதற்கான அதிகாரபூர்வ அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்று திறனாளிகள் பயன் பெற அதிகம் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசாணை வெளியிடப்படும் தேதியில் இருந்து விதிகள் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!