நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!

0
நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு
நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு
நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!

தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக பின்னடைந்த மாணவருக்கு இலவசமாக படிக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி

இந்தியாவில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் நலிவடைந்த குடும்பத்தினை சேர்ந்த குழந்தைகள் படிக்க 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக தேர்வாகும் குழந்தைகளின் கல்வி செலவினை 8 ஆம் வகுப்பு வரை அரசே ஏற்கும். இந்த கல்வி ஆண்டு துவங்கியுள்ளதால் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஜனவரி 2021 அன்று 3 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிக்கை ஒன்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் சார்பாக வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்களை rte.tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது. அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மைய அலுவலகங்களில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

இதில் விண்ணப்பிக்க குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் விண்ணப்பிக்கும் போது வருமான வரி சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, குழந்தையின் புகைப்படம், பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் மற்றும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வரவேற்கப்படுகின்றன. ஆகஸ்ட் 3 ஆம் தேதி இதற்கு கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here