தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை வரும் மே 18ம் தேதி வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இலவச கட்டாயக் கல்வி

கடந்த இரண்டு வருடமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்தனர். இருப்பினும் 2020 மற்றும் 2021 ம் ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை வெளியிட்டு வந்தது. இரண்டு வருடமாக தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க ஆசைப் படும் பெற்றோர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை பெற்று, பிள்ளைகளை சேர்த்து வந்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை – அரசு திடீர் அறிவிப்பு!

இருப்பினும் கோவை கலெக்டர்.சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் குறைந்த பட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் நடப்பு கல்வி ஆண்டில் இந்த திட்டத்தின் மூலம் மாணவர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 20-ந் தேதியில்  இருந்து rte.tnschools.gov.in என்ற  இணையதளம் வழியாக வெளியிடப்பட்டு வருகிறது என்றார். இந்நிலையில் இத்திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 18-ந் தேதி இறுதி நாளாகும் என கூறியிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

பதிவிடப்பட்ட விண்ணப்பங்களில் தொடர்ந்து தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் தகுதியில்லாத நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அனைத்தும் பள்ளி வளாகத்தில் உள்ள தகவல் பலகையில் வருகிற 21-ந் தேதி வெளியிடப்படும். தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் 23-ந் தேதி குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்கள் காத்திருப்பு பட்டியல் ஆகிய விவரங்களை மே 24-ந் தேதி பள்ளி நிர்வாகங்கள் வெளியிட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் பல ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என கூறியிருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here