தமிழக தனியார் பள்ளிகளில் RTE 25% இலவச மாணவர் சேர்க்கை – ஜூலை 5 முதல் தொடக்கம்!
கட்டாய கல்வி உரிமை பெறும் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் வரும் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி சட்டம்
இந்தியாவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்து படிக்கலாம். இந்த ஆண்டு இந்த சட்டத்தின் கீழ் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பிற்கு சேர விரும்பும் மாணவர்கள் இணையத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இணையத்தின் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஜூன் 27 மின்தடை!
இது குறித்து கல்வி செயலாளர் காகர்லா உஷா கூறுகையில், ‘தனியார் பள்ளிகள் காலி இடங்கள் குறித்த விவரங்களை கூற வேண்டும் என்றும், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாக நிரப்பப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை பள்ளி அறிவிப்பு பலகை மற்றும் பள்ளிக்கல்வி துறை இணையத்திலும் பதிவேற்ற வேண்டும்’ இவ்வாறாக தெரிவித்துள்ளார். இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் வரும் ஜூலை மாதம் 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை பள்ளிக்கல்வி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://rte.tnschools.gov.in என்பதில் சென்று பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதே போல் தனியார் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை குறித்த விவரங்களை ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலக அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சம் காரணமாக பெற்றோர்கள் இணையத்தில் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் விண்ணப்பிக்கும் போது பெற்றோர்கள் தங்களது குழந்தையின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.