தமிழக மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை – எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்களுடன்!

0
தமிழக மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை - எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்களுடன்!
தமிழக மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை - எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்களுடன்!
தமிழக மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை – எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்களுடன்!

அரசு பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு அரசு மாதந்தோறும் ரூ. ஆயிரம் நிதியுதவியாக வழங்க உள்ளது. தற்போது அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான முழு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி உதவித்தொகை:

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், மேற்படிப்புக்கு உதவும் வகையிலும் தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் உயர்கல்வி திட்டத்தின் வாயிலாக 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு பயில விரும்பும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்படிப்பு படித்து முடிக்கும் வரைக்கும் அந்த மாணவியின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த மாணவிகள் இத்திட்டத்தின் மூலமாக பயன் பெறலாம் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? கொரோனா பரவல் எதிரொலி!

இத்திட்டத்தின் மூலமாக உதவிபெறும் மாணவி கட்டாயமாக 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். தனியார்ப் பள்ளியில் Right to Education (RTE)யின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு 9 ஆம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று இருந்தாலும் அந்த மாணவி இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில் படித்த மாணவிகளும் இந்த திட்டத்தின் மூலமாக ரூபாய் ஆயிரம் நிதியுதவி வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மேற்படிப்புக்காக (Certificate course), பட்டயம் (Diploma / ITI, D.TEd., courses),  இளங்கலைப் பட்டம் (Bachelor’s Degree) (B.A., B.Sc., B.Com., BBA., BCA. and all Arts & Science, Fine Arts Courses), தொழில் சார்ந்த படிப்பு (B.E., B.Tech, M.B.B.S., B.D.S., B.Sc.,(Agri). B.V.Sc., B.Fsc., B.L., etc.) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy) இவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி, திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டத்தின் மூலமாக நிதியுதவி கிடைக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பமும் தகுதியும் பெற்ற மாணவிகள் https://penkalvi.tn.gov.in என்கிற இணையதள முகவரிக்கு  சென்று விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!