தமிழகத்தில் மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை – அமைச்சர் பொன்முடி முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை - அமைச்சர் பொன்முடி முக்கிய தகவல்!
தமிழகத்தில் மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை - அமைச்சர் பொன்முடி முக்கிய தகவல்!
தமிழகத்தில் மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை – அமைச்சர் பொன்முடி முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பதை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்:

தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இந்த திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களை ஜூன் 30 வரை மாணவிகள் பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தின் கீழ் யார் யார் பயனடைவார்கள் என்று தமிழக அரசு வெளியிட்ட குறிப்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும். மேலும் இளநிலை,தொழிற்கல்வி,மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும். இதையடுத்து இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதத்திற்குள் இலவச நோட் புக்? கல்வித்துறை அறிவிப்பு!

குறிப்பாக,மாணவிகள் ஏற்கனவே வேறு திட்டத்தில் பயன் பெற்று வந்தாலும்,இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர். மேலும் கல்லூரிகளில் முதலாமாண்டு முடித்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவிகளும் , 2 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் . மேலும் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 6 முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று பின் அரசு பள்ளிகளில் சேர்ந்து படித்திருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.

மேலும்,மாதம் ரூ.1000 பெறும் இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா எண்ணை மாணவிகள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் ரூ.1,000 மாத உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் கடந்த ஜூன் 30 தேதி முடிந்த நிலையில், இந்த திட்டத்திற்கு இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!