தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – சிறப்பு முகாம் குறித்த அறிவிப்பு!

0
தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை - சிறப்பு முகாம் குறித்த அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை - சிறப்பு முகாம் குறித்த அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – சிறப்பு முகாம் குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியான மாணவிகளின் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

உதவித்தொகை:

தமிழகத்தில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் மற்ற நிறுவனங்கள், துறைகள், கடைகள் ஆகியவற்றை தொடர்ந்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. அதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேரடி கற்றல் முறை இல்லாமல் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அதனால் மாணவர்களின் கற்றல் நிலை குறித்த கேள்வியும் எழுந்தது. இத்தகைய இக்கட்டான சூழலில் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை செலுத்த கூறி மாணவர்களின் பெற்றோர்களை வற்புறுத்தினர். ஏற்கனவே தொற்றால் பொருளாதார ரீதியாக மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் கல்வி கட்டணம் அவர்களுக்கு பெரும் சுமையாக இருந்து வந்தது.

Exams Daily Mobile App Download

இந்த நேரத்தில் பெற்றோர்கள் தனியார் பள்ளியில் பயில கூடிய தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முற்பட்டனர். அதனால் 2021 – 2022ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்தது. இந்த நிலையில் அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது.

TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இத்திட்டத்திற்காக https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை அந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக கலை மற்றும்  அறிவியல் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளின் பெயர்களை சேர்க்க இன்று முதல் வரும் 30ம் தேதிக்குள் சிறப்பு முகாம்களை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மாணவிகள் வங்கிக் கணக்கு விவரம், ஆதார் எண் ,10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!