மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஆண்டிற்கு ரூ.95,000 அதிகரிப்பு – அகவிலைப்படி உயர்வு எதிரொலி!

0
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஆண்டிற்கு ரூ.95,000 அதிகரிப்பு - அகவிலைப்படி உயர்வு எதிரொலி!
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஆண்டிற்கு ரூ.95,000 அதிகரிப்பு - அகவிலைப்படி உயர்வு எதிரொலி!
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஆண்டிற்கு ரூ.95,000 அதிகரிப்பு – அகவிலைப்படி உயர்வு எதிரொலி!

7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அதிக அளவில் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தங்களின் அடிப்படை ஊதியத்துடன் ஆண்டிற்கு ரூ.95,000 என்ற அளவில் அதிக பலனை அடைகின்றனர். இது குறித்த முழு விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

7வது ஊதியக் குழு:

மத்திய அரசின் 47.14 லட்சம் ஊழியர்களுக்கும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் கொரோனா பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA தொகை உயர்வு சமீபத்தில் உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால் நிலுவை காலத்திற்கான பணம் வழங்கப்படாது என்றும், நடப்பு தவணைகளில் உயர்த்தப்பட்ட அளவில் அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதனால் மத்திய அரசு பல ஆயிரம் கூடி அளவிலான பணத்தை சேமித்து. தொடர்ந்து ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படியில் விரைந்து DA உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.20,000/- ஊதியம்

இதனால் கடந்த ஜூன் 30ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் இறுதியாக 17% ஆக DA தொகை 11% அதிகரிக்கப்பட்டு 28 % ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்பிறகு தற்போதைய தவணைகள் DA உயர்வு 3% அதிகரிக்கப்பட்டு மொத்தம் 31% DA உயர்வானது நவம்பர் மாதம் வந்துள்ளது. அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு, ஊழியர்களின் சம்பளம் ரூ.95,000 என்ற அளவில் உயரும். அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தரத்திற்கு ஏற்ப அவர்களின் சம்பளம் அதிகரிக்கும்.

தமிழக அஞ்சல் துறையில் MTS வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, நிலை 1ல் உள்ள மத்திய அரசு ஊழியரின் சம்பளம் ரூ.18000 முதல் ரூ.56900 வரை இருக்கும். மேலும் DA உயர்வினால் ரூ.18000 சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியருக்கு ஆண்டு ஊதிய உயர்வு ரூ.30,240 ஆக இருக்கும். இதனை எப்படி கணக்கீடு செய்வது என்பதை காணலாம்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:

பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000
புதிய அகவிலைப்படி (31%) ரூ 5580/மாதம்
இதுவரை அகவிலைப்படி (17%) ரூ 3060/மாதம்
எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 5580-3060 = ரூ 2520/மாதம்
ஆண்டு சம்பள உயர்வு 2520X12 = ரூ.30,240.

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:

பணியாளரின் அடிப்படை சம்பளம்: ரூ 56900
புதிய அகவிலைப்படி (31%) ரூ 17639 / மாதம்
இதுவரை அகவிலைப்படி (17%) ரூ 9673/மாதம்
எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 17639-9673 = ரூ 7966 / மாதம்
ஆண்டு சம்பள உயர்வு 7966X12 = ரூ.95,592.

ஆகவே,31% அகவிலைப்படி உயர்வின் காரணமாக மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ. 56900 அடிப்படை சம்பளத்தில் ரூ. 211,668. இதனால் ஆண்டுக்கு சம்பளத்தில் ரூ.95,592 அதிகரித்து வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!