EPFO வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு – ரூ.67,619.72 கோடி வசூல்!

0
EPFO வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு - ரூ.67,619.72 கோடி வசூல்!
EPFO வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு - EPFO வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு - ரூ.67,619.72 கோடி வசூல்!ரூ.67,619.72 கோடி வசூல்!
EPFO வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு – ரூ.67,619.72 கோடி வசூல்!

EPFO அமைப்பு கடன் மற்றும் ஈக்விட்டி ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக பல கோடி ரூபாய் பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு செய்து வருகிறது. இந்நிலையில், முதலீட்டையும் தாண்டி ரூ.67,619.72 கோடி வசூலையும் அள்ளியுள்ளது.

EPFO வசூல்:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு செய்து பல கோடி வசூலை அள்ளி வருகிறது. அதாவது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பங்குப் பரிவர்த்தனை வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு மட்டுமே தற்போது ரூ.2,26,919.18 கோடியாக வளர்ந்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார். அதாவது, EPFO அமைப்பு பெரும்பாலும் அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி 15%த்தை ETFs களில் முதலீடு செய்கிறது.

Exams Daily Mobile App Download

மேலும், நிஃப்டி, சென்செக்ஸ், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEகள்) மற்றும் பாரத்-22 குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் EPFO அமைப்பு பங்குப் பரிவர்த்தனை வர்த்தகத்தில் முதலீடு செய்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டுமே கடன் மற்றும் ஈக்விட்டி ஆகியவற்றை சேர்த்து ரூ.84,477.67 கோடி ரூபாய் பங்குப் பரிவர்த்தனை வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில், ஈக்விட்டி எக்ஸ்போஷர் வரம்பை உயர்த்தவும் அரசு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 11) எந்தெந்த ஏரியால Power Cut – முழு பட்டியல் இதோ!

அதாவது, கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், தற்போதைக்கு ஈக்விட்டி எக்ஸ்போஷர் வரம்பு 15% முதல் 20% வரைக்கும் அதிகரிக்கலாம் எனவும், பின்னர் 25% வரைக்கும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், EPFO பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு செய்து மொத்தமாக ரூ.67,619.72 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!