‘நீரஜ்’ என்ற பெயர் உள்ளவர்களுக்கு ரூ.501 இலவச பெட்ரோல் – அதிரடி ஆஃபர்!

0
'நீரஜ்' என்ற பெயர் உள்ளவர்களுக்கு ரூ.501 இலவச பெட்ரோல் - அதிரடி ஆஃபர்!
'நீரஜ்' என்ற பெயர் உள்ளவர்களுக்கு ரூ.501 இலவச பெட்ரோல் - அதிரடி ஆஃபர்!
‘நீரஜ்’ என்ற பெயர் உள்ளவர்களுக்கு ரூ.501 இலவச பெட்ரோல் – அதிரடி ஆஃபர்!

குஜராத் மாநிலத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வழங்கப்படும் ஆஃபர் மாநிலம் முழுவதும் வைரலாகியுள்ளது. அதாவது நீரஜ் என்னும் பெயர் கொண்ட அனைவருக்கும் ரூபாய் 501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்பதே அந்த ஆஃபர்.

இலவச பெட்ரோல்:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடப்பாண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்றார். இது நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் இரண்டாவது தங்கப் பதக்கம் மற்றும் தடகளத்தில் முதல் முறையாகும். இதற்காக நீரஜ் சோப்ராவிற்கு கோடிக்கணக்கில் பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

செவ்வாய் கிரக பணிக்காக ஆட்சேர்ப்பு, நாசா அழைப்பு – முழு விவரங்கள் இதோ!

இவரது சாதனையை பாராட்டும் விதமாக குஜராத் மாநிலம் பரூச் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் 501 ரூ மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு ஒன்றை அளித்திருந்தார். அதில் முக்கிய நிபந்தனை என்னவென்றால் இலவச பெட்ரோல் பெற விரும்பும் நபரின் பெயர் நீரஜ் அல்லது நீரஜ் சோப்ரா என்று இருக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்களது ஒரிஜினல் ஆவணத்தை காட்டி பெட்ரோல் பெற்று செல்லலாம்.

TN Job “FB  Group” Join Now

இந்த சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை பார்த்த பலர் 501 ரூ மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக வாங்கி சென்றனர். அவ்வாறு பெட்ரோல் பெற்று சென்றவர்களுக்கு பங்க் ஊழியர்கள் பெட்ரோலுடன் பூங்கொத்து கொடுத்து கவுரவித்தனர். தங்க பதக்கம் பெற்ற வீரரை கௌரவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது. இந்த முயற்சியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!