காசி யாத்திரை செல்வோருக்கு ரூ.5,000 நிதியுதவி – அரசு அறிவிப்பு!

0
காசி யாத்திரை செல்வோருக்கு ரூ.5,000 நிதியுதவி - அரசு அறிவிப்பு!
காசி யாத்திரை செல்வோருக்கு ரூ.5,000 நிதியுதவி - அரசு அறிவிப்பு!
காசி யாத்திரை செல்வோருக்கு ரூ.5,000 நிதியுதவி – அரசு அறிவிப்பு!

இந்தியாவின் புனித தலமான காசிக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ரூ.5,000 வரை நிதியுதவியை வழங்குவதாக கர்நாடகா மாநில அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.

நிதியுதவி அறிவிப்பு

கர்நாடகா மாநிலத்தில் இருந்து புனிதப் பயணமாக காசி யாத்திரைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசிக்கு யாத்திரை செல்லும் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களுக்கு ரூ.5,000 நிதி உதவி வழங்குவதாகவும், இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அம்மாநிலத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

இது குறித்து கர்நாகடா அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டல் நெறிமுறைகளின் படி, காசி யாத்திரைக்கு செல்பவர்களது பூர்வீகம் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்ததாகவும், ஏப்ரல் 1 முதல் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களது ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் வங்கி கணக்கு புத்தகத்தை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை? ஜூலை 1ம் தேதி முதல் அமல்! அரசு அறிவிப்பு!

இப்போது, அரசு வழங்கும் நிதி உதவியை பெற்று ஒரு முறை காசி புனித யாத்திரைக்கு செல்பவர்கள் அடுத்த முறை உதவித்தொகையை பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர காசி யாத்திரையை மேற்கொள்ள விரும்புபவர்கள் குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் தங்களது விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்த பிறகு, கர்நாடகா இந்து அறநிலையத்துறை கமிஷனர் அதனை ஆய்வு செய்த பின்னர் நிதியுதவி அளிப்பது குறித்த அனுமதியை வழங்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!