தமிழக பள்ளி கல்வித்துறையில் ரூ 45,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!

0
தமிழக பள்ளி கல்வித்துறையில் ரூ 45,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் கவனத்திற்கு!
தமிழக பள்ளி கல்வித்துறையில் ரூ 45,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் கவனத்திற்கு!
தமிழக பள்ளி கல்வித்துறையில் ரூ 45,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!

தமிழக பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படும் புதுமையான முயற்சிகளுக்கு உதவும் வகையில், இளைஞர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. அதாவது தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை திட்டத்தில் காலியாக உள்ள 152 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் வகையில், “இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை” போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு ஆதரவளிக்க, தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை திட்டம் (Tamil Nadu Education Fellowship) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்து அரசுடன் பணிபுரிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திட்டத்தின் பெயர்: Tamil Nadu Education Fellowship

1.பணியின் பெயர் : Senior Fellows

காலிபணியிடங்கள் : 38 இடங்கள்

மாத சம்பளம்: ரூ.45,000

விண்ணப்பதாரர் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். சமூக ஊடங்களைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

பணிகள் : விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், திட்ட ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தல், திட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான பயிலரங்கை ஏற்பாடு செய்தல், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவிகள் மூலம் உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.

Exams Daily Mobile App Download

2.பணியின் பெயர்: Fellows

காலிப்பணியிடங்கள் : 114 இடங்கள்

மாத சம்பளம்: ரூ.32,000

விண்ணப்பதாரர் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணிகள்: அரசின் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்த துணைபுரிய வேண்டும். திட்டங்களை சமுதாய அளவில் கொண்டு செல்வதற்கு பல்வேறு தொலை தொடர்பு உத்திகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனை செயல்படுத்துவதற்கு துணை புரிய வேண்டும்.

  • அரசுப் பள்ளி தேவைகளை அடையாளம் காணுதல், கல்வித் தேவைகளை நிறைவேற்றுதல், கல்வித்தரத்தை உயர்த்துதல் போன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவிகள் துணையுடன் உதவ வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், விண்ணப்பத்தாரர் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். பணி முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவத்திற்கான லிங்க் மற்றும் கூடுதல் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் 30.06.2022 ஆம் தேதிக்கு முன்னதாக கிடைக்கும்படி விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!