சிலிண்டருக்கு ரூ.450 மானியம்…2.5 லட்சம் பேருக்கு அரசு வேலை – வெளியான தேர்தல் அறிக்கை!
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கையில் 450 ரூபாய் எரிவாயு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு மானியம்
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் தனது ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதே போல எதிர்க்கட்சியான பாஜகவும் ஆட்சியை பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய மந்திரி கஜேந்திர சிங்க ஷெகாவத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் புதிய ஊதியக்குழு.. விரைவில் நடவடிக்கை – உயரும் சம்பளம்!
அப்போது உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம் வழங்கப்படும் எனவும் 2.5 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கபடும் என பல வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பிற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும், பெண் குழந்தை பிறந்தால் குழந்தைகளின் பெயரில் ரூ.2 லட்சம் சேமிப்பு பத்திரம், நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பாலிசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.