தமிழகத்தில் ரூ.40,000 சம்பளத்தில் சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
தமிழகத்தில் ரூ.40,000 சம்பளத்தில் சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலக வளாகத்தில் செயல்பட உள்ள மாவட்ட பொது சுகாதார ஆய்வுக்கூடத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்தது. அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் நிலவி வந்த வேலைவாய்ப்பின்மையை போக்க அரசு, பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

இந்த வகையில் தற்போது செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலக வளாகத்தில் செயல்பட உள்ள மாவட்ட பொது சுகாதார ஆய்வுக்கூடத்திற்கு (District Public Health Laboratory) நுண்ணுயிரியலாளர் (Microbiologist), ஆய்வக நுட்புநர் (Lab Technician) , ஆய்வக உதவியாளர்(Lab Attendant) ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.06.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

Exams Daily Mobile App Download

நுண்ணுயிரியலாளர் (Microbiologist) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பித்தார் MBBS., MD(Microbilogy) /MBBS படிப்புடன் 2 வருட lab experience இருக்க வேண்டும். மேலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு Rs.40,000/- வரை வழங்கப்படும். இதையடுத்து நுண்ணுயிரியலாளர் (Microbiologist) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் M.Sc Medical Microbiology படித்திருக்க வேண்டும், மாத சம்பளமாக Rs.25,000/- வழங்கப்படும். இதை தொடர்ந்து ஆய்வக நுட்புநர் (Lab Technician) பணிக்கு விண்ணப்பிக்க Minimum DMLT படித்திருக்க வேண்டும் , மாத சம்பளமாக Rs.12,000/- வழங்கப்படும். உதவியாளர் ஆய்வக (Lab Attendant) பணிக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் Rs.8,000/- வழங்கப்படும்.

இந்தியாவில் ஒரே நாளில் 17000 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – 13 பேர் உயிரிழப்பு!

விண்ணப்பங்களை ” நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ஜி.எஸ்.டி சாலை, செங்கல்பட்டு மாவட்டம்” என்ற அலுவலக முகவரிக்கு தபால் மூலமாக இவ்வலுவலகத்திற்கு 30.06.2022 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் அதிகாரபூர்வ இணையதள முகவரி https://drive.google.com/file/d/19WpyhL6ChqpsOXPA2Fp01Uk1vuLKxlak/view க்கு  சென்றும் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!