அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் ரூ.30,000 கூடுதல் தொகை – முழு விவரம் இதோ!

0
அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் ரூ.30,000 கூடுதல் தொகை - முழு விவரம் இதோ!
அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் ரூ.30,000 கூடுதல் தொகை - முழு விவரம் இதோ!
அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் ரூ.30,000 கூடுதல் தொகை – முழு விவரம் இதோ!

தற்போது 7வது சம்பள கமிஷனின் படி ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் சேர்த்து கூடுதலாக 5 மடங்கு ஊக்கத் தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூடுதல் சலுகை:

சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது பணியைத் தொடரும் போது உயர் பட்டப்படிப்புகளை பெறும் அரசு ஊழியர்களுக்கு 5 மடங்கு வரை ஊக்கத் தொகையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பிஎச்டி போன்ற உயர் பட்டம் பெறும் ஊழியர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.10,000 லிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சகம் 20 ஆண்டு கால விதிகளில் திருத்தம் செய்து உயர் பட்டப்படிப்புகளை அடைவதற்கான ஊக்கத் தொகையை உயர்த்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்போது பழைய விதிகளின்படி, இதுவரை பணியின் போது உயர் பட்டம் பெற்ற ஊழியர்களுக்கு, 2,000 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 2019ம் ஆண்டு முதல் இந்த ஊக்கத்தொகை குறைந்தபட்சம் ரூ.2,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சுற்றறிக்கையின்படி 3 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான பட்டப்படிப்பு டிப்ளமோ பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என்றும் 3 ஆண்டுகளுக்கு மேல் பட்டம் அல்லது டிப்ளமோ பெற ரூ.15,000 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை AIIMS மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!

அதே போல 1 வருடம் அல்லது அதற்கும் குறைவான முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற ரூ.20,000, 1 வருடத்திற்கு மேல் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ரூ.25,000 மற்றும் பிஎச்டி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்களுக்கு ரூ.30,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களில், தூய கல்வி அல்லது இலக்கியப் பாடங்களில் உயர் தகுதி பெறுவதற்கு ஊக்கத்தொகை வழங்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு பணியாளர்கள் பெற்ற பட்டம் அல்லது டிப்ளமோ பணியாளரின் பதவியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அவரது அடுத்த பதவியில் செய்ய வேண்டிய பணியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பணியாளரின் திறமைக்கும் பணிக்கும் இடையே நேரடி தொடர்பு இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here