கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்!

0
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்!
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்!
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்!

கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்த கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து துறையை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூபாய் 30 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

நிவாரண தொகை :

கொரோனா இராண்டாம் அலை நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் ஏராளமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். நோய் பரவலை தடுக்க அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஊரடங்குகளை அறிவித்தது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தியது ஆனாலும் நோய் பரவல் குறையவில்லை. பலி எண்ணிக்கையும் பாதிப்புகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றது.

2 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு!

இந்த கொடிய வைரஸால் மக்கள் தங்களின் உறவுகளையும், குடும்ப உறுப்பினர்களையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகினர். குடும்பத்தில் வருமானம் ஈட்ட கூடிய நபரை இழந்து மிகவும் சிரமப்பட்டனர். அதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்கியது. மேலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களும் நிவாரண தொகைகள் வழங்கப்பட்டது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்த 186 நபர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 30 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதனை தொடர்ந்து அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று கர்நாடக அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் நிவாரணத் தொகைகளை அறிவித்தார். மேலும் மாநிலத்தில் 6,090 கிராம பஞ்சாயத்துகளில் பசுமை பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது குடிநீர் தூய்மையின்மை பற்றி புகாரளிக்க 9480985555 என்ற தொலைபேசி எண்ணையும் அறிமுகப்படுத்தினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!